நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாய்ம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என  22 பேர் சொத்துகளை அறிவிக்க வேண்டும்: எம்ஏசிசி 

புத்ராஜெயா:

துன் டாய்ம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என 22 பேர் சொத்துகளை அறிவிக்க எம்ஏசிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின், அவரது மனைவி நைமா காலித்திற்கு எதிரான எம்ஏசிசி நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.

இந்ந்தன் அடப்படையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என அடையாளம் காணப்பட்ட மொத்தம் 22 நபர்களுக்கு நேற்று முதல் சொத்து அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

11 நாடுகளில் 3 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சொத்துக்களின் உரிமையைக் கண்டறியப்பட்டுள்ளது.

இதை சரிபார்க்க எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 36(1) இன் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

எம்ஏசிசி  சிறப்பு செயல்பாட்டுப் பிரிவு இப்போது டாய்ம், நைமா, குடும்ப உறுப்பினர்கள்,  அவர்களது நணபர்களுக்கு  தொடர்புடைய அசாதாரண சொத்துக்களைக் கைப்பற்றுதல், பறிமுதல் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

இவை ஐக்கிய அரபு சிற்றரசு, அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து, சிங்கப்பூர், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், கேமன் தீவுகள், ஜெர்சி, இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா, ஆப்பிரிக்க கண்டத்தின் பல நாடுகளில் உள்ளன.

அவற்றின் மதிப்பு 3 பில்லியன் ரிங்கிட்டை தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று எம்ஏசிசி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset