நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

அமெரிக்க வரிவிதிப்பு விவகாரத்தில் சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது இதனை கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் வரி உயர்வுகளுக்கு பதிலளிக்கும் விதமாக,

சீனாவுடனான அதன் பொருளாதார உறவுகளை மலேசியா முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரிவிதிப்பு முழு உலகிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், பல அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த செலவுகள் காரணமாக வெளிநாடுகளில் செயல்படுவதால் அமெரிக்கர்களும் பாதிக்கப்படுவார்கள்.

ஆனால் உலகின் பிற பகுதிகள் அதிக வரிகளை விதிக்கவில்லை. எனவே நாம் அவர்களுடன் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டும்.

உதாரணமாக சீனாவுடன் முடிந்த வரை, அமெரிக்காவைத் தவிர்ப்பதன் மூலம் டிரம்பின் அதிக வரிவிதிப்புகளின் தாக்கத்தை குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset