நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்

புத்ரா ஜெயா:

கூட்டரசு அரசியலமைப்பின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சட்டத்துறை நியமனச் செயல்முறையை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார். 

திங்களன்று மலேசிய வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள சட்டத்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பேரணியை நிறுத்தச் சொல்லவில்லை. 

மாறாக, அவர்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டுமென்று அன்வார் கேட்டுக் கொண்டார். 

இது குறித்து சட்டத்துறை தலைவர் Tan Sri Mohd Dusuki Mokhtar, பிரதமர் துறையின் சட்ட மற்றும் கழகச் சீர்த்திருத்த அமைச்சர்  Datuk Seri Azalina Othman Said, பேரரசர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர் விளக்கம் தெரிவித்தனர்.  

எனவே கூட்டரசு அரசியலமைப்பின் செயல்முறைகள் மற்றும் விதிகளைப் பின்பற்றுவோம் என்று இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்தித்தபோது பிரதமர் அன்வார் இவ்வாறு கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset