நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய கூட்டுறவுக் கழகங்களில் ஆணையம் அனுமதித்தால் கேஎம்ஜே உறுப்பினர்களுக்கு லாப ஈவு வழங்கப்படும்: டத்தோ இப்ராஹிம் ஷா

கோலாலம்பூர்:

தேசிய கூட்டுறவுக் கழகங்களில் ஆணையம் அனுமதித்தால் கேஎம்ஜே உறுப்பினர்களுக்கு லாப ஈவு வழங்கப்படும்.

கேஎம்ஜே எனப்படும் மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தின் தலைவர் டத்தோ இப்ராஹிம் ஷா இதனை கூறினார்.

தேசிய கூட்டுறவுக் கழகங்களில் ஆணையத்தின் இயக்குநர் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த கால பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்பட்டு மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தின் தற்போது வெற்றி பாதையில் பயனித்துக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டு  மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்திற்கு லாபகரமான ஆண்டாக அமைந்துள்ளது.

அதன் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு லாப ஈவு வழங்க இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 16 ஆயிரம் உறுப்பினர்கள் பயனடைவார்கள்.

உறுப்பினர்களுக்கு லாப ஈவு வழங்கப்படுவது குறித்து தேசிய கூட்டுறவுக் கழகங்களின் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவுக் கழகங்களில் ஆணையம் அனுமதித்தால் அனைத்து உறுப்பினர்களுக்கும் லாப ஈவு வழங்கப்படும் என்று டத்தோ இப்ராஹிம் ஷா கூறினார்.

மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா மாஹ்சா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இம்முறை 5 இயக்குநர்கள் பதவிக்கு 7 பேர் போட்டியிடுகின்றனர். ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பேராளர்கள் புதிய இயக்குநர்களை தேர்வு செய்வார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset