
செய்திகள் மலேசியா
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
கோலாலம்பூர்:
மத்திய அரசு கிளந்தான் மாநிலத்தைப் புறக்கணிக்கவில்லை என்று துணைப் பிரதமர் அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார்.
கிளந்தானின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக் கட்டையாகச் செயல்படுவதாகவும் மாநிலத்தைப் புறக்கணிப்பதாகவும் கூறிய பாஸ் கட்சியின் துணைத் தலைவர் அமர் நிக் அப்துல்லாவின் கருத்துக்கு ஜாஹித் மறுப்பு தெரிவித்தார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஒவ்வொரு முறை கிளந்தான் மாநிலத்திற்கு வருகை தரும் போதும் அதற்கான ஒதுக்கீடுகளை அறிவிப்பதை ஜாஹித் சுட்டிக் காட்டினார்.
அதுமட்டுமல்லாமல், அண்மையில் அம்மாநிலத்தில் சரிவு ஏற்பட்ட பகுதியைச் சீரமைக்கும் பணிகளுக்குப் பிரதமர் அன்வார் 6.6 மில்லியன் நிதிக்கு ஒப்புதல் வழங்கியதையும் ஆஹித் மேற்கோள் காட்டினார்.
இதற்கு மாநில அரசு நன்றி தெரிவித்தது.
அமர் நிக் அப்துல்லா பொதுமக்களைத் தவறாக வழி நடத்தக்கூடாது என்று அவர் மேலும் கூறினார்
முன்னதாக, நெடுஞ்சாலை இல்லாத ஒரே மாநிலம் கிளந்தான் என்று அமர் தனது முகநூல் பதிவில் கூறியிருந்தார்.
மேலும், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் மத்திய அரசு தாமதம் செய்ததாகவும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 8:32 pm
82,637 சுகாதார ஊழியர்களுக்கு ஷிப்ட் வேலையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது: ஜேபிஏ
July 11, 2025, 8:29 pm
வரிகள் அமெரிக்காவை மூழ்கடிக்காது; ஆசியானையும் ஓரங்கட்டாது: ரூபியோ
July 11, 2025, 8:25 pm
ஹெலிகாப்டர் விபத்து: தேவேந்திரனின் நுரையீரல் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளது
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm