
செய்திகள் இந்தியா
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
மும்பை:
மகாராஷ்டிரத்தில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் குத்துவிட்டு கடுமையாக தாக்கினார். இணையத்தில் இந்த விடியோ வைரலான பிறகு மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கண்டனம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் எதிரொலித்தது.
மும்பையில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் தங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு வரவழைத்து சாப்பிட்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட உணவு தரமாக இல்லை என்று கூறி உணவகப் பொறுப்பாளரிடம் கெய்க்வாட் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குத்துவிட்டார்.
விடுதி ஊழியரைத் தாக்கியதற்கு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேரவையில் கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய சஞ்சய் கெய்க்வாட், "உணவின் தரம் குறித்து ஏற்கெனவே ஒருசில முறை புகார் அளித்துவிட்டேன். இருந்தும் விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், தான் கராத்தே, கும்ஃபுவில் கைத்தேர்ந்தவன் என்றும் அவர் தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டை குறித்து பேசிய ராகுல் காந்தியை நாக்கை வெட்டுவோருக்கு ரூ.11 லட்சம் வழங்குவதாக சஞ்சய் கெய்க்வாட் அறிவித்து முன்பு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm