நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமருக்கு சட்ட சிக்கல்கள் இருக்கும் வரை நீதித்துறை சுதந்திரம் உறுதி செய்யப்படாது: மொஹைதின்

கோலாலம்பூர்:

பிரதமர் தனிப்பட்ட முறையில் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும் வரை நீதித்துறை சுதந்திரம் உறுதி செய்யப்படாது.

தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை எச்சரித்துள்ளார்.

நீதித்துறை நெருக்கடி குறித்த கவலைகளில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான யூசோப் ராவ்தரின் சிவில் வழக்கை அவர் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தவறான பாதையில் செல்கிறார் என்பதை உணரத் தொடங்கிவிட்டனர்.

இனி அவரை நம்புவதில்லை என்றும் முடிவு செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

மேலும் நிறுவன சீர்திருத்தம் செயல்படுத்தப்படாத ஒரு வாக்குறுதியாகவே உள்ளது.

உண்மையில்.பிரதமர் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்வதற்காக, நாட்டின் நிறுவனங்கள் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

மக்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset