நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

343 மாணவர்கள் நச்சு உணவால் பாதிக்கப்பட்டதற்கு ஆயாம் கூலாய் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

கோத்தாபாரு:

343 மாணவர்கள் நச்சு உணவால் பாதிக்கப்பட்டதற்கு கோழி கறி (ஆயாம் கூலாய்) காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில்  புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான விளக்கக் கூட்ட நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட புதிய மாணவர்கள், பணியாளர்கள் உட்பட மொத்தம் 343 பேர் இன்று நச்சு உணவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த நோய் பரவல் உறுதி செய்யப்பட்டது.

மேலும் 134 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த போது இப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மேலும் 209 வழக்குகள் சுகாதாரப் பணியாளர்கள், செயலில் வழக்கு கண்டறிதல் மூலம் கண்டறியப்பட்டது.

வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, காய்ச்சல் ஆகியவை முக்கிய அறிகுறிகள் கண்டறியப்பட்டது.

சந்தேகத்திற்குரிய உணவு நேற்று இரவு  சாப்பிட்ட ஆயாம் குலாய் என சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset