நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை

புது டெல்லி:

முக்கிய நாட்களில் விமானக் கட்டணங்களை திடீரென உயர்த்தும் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற நிலைக் குழுவிடம்   டிஜிசிஏ உறுதி அளித்தது.

மகா கும்பமேளா, பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சம்பந்தப்பட்ட இடங்களில் அதிக அளவில் பயணிகள் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தியபோது கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தன.

கட்டணத்தைக் குறைக்க ஒன்றிய அரசு விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தபோதும் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டத்தில் எழுப்பிய எம்.பி.க்கள், கட்டணங்களை திடீரென உயர்த்துவது நியாமற்ற செயல் என்றனர். 

இதையடுத்து, விமான கட்டணங்கள் திடீரென உயர்த்தப்படுவதைத் தடுக்க நெறிமுறைகளை உருவாக்கப்படும் என்று கூட்டத்தில் பங்கேற்ற டிஜிசிஏ உயரதிகாரிகள் உறுதி அளித்தனர். 

மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் தலைவருமான கேம்பெல் வில்சன் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் உறுதி அளித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset