நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை

திருவனந்தபுரம்: 

மருத்துவர் கொலை வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியருக்கு எமன் நாட்டில் வரும் ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மாஹதியை கொலை செய்த வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு பெற்றுத் தர யேமன் அரசு அதிகாரிகள் மற்றும் மாஹதி குடும்பத்தினருடன் சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.  நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற, இன்னும் வாய்ப்புகள் உள்ளன என்று நம்பி இருக்கிறார்.

கடந்த சந்திப்பின்போது மாஹதி குடும்பத்தினரிடம் இழப்பீடு அளிக்கும் வாய்ப்பை முன்வைத்தோம். அதற்கு இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர நான் மீண்டும் யேமன் புறப்படுகிறேன். இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்' என்றார் அவர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset