
செய்திகள் மலேசியா
சமூக தொழில்முனைவோரின் வளர்ச்சி திட்டங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
சுபாங்ஜெயா:
சமூக தொழில்முனைவோரின் வளர்ச்சி திட்டங்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
மலேசியாவில் சமூக தொழில்முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அமைச்சு முழு உறுதிப்பாட்டை கொண்டுள்ளது.
கொள்கைகள், பயிற்சி, சான்றிதழ், நிதி ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் தனது பங்கை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
நாட்டின் உள்ளடக்கிய, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு சமூக தொழில்முனைவோரை ஒரு உந்து சக்தியாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போகின்றன.
மேலும் இதில் தொடர்ச்சியான முயற்சிகளும் உள்ளன என்று அவர் கூறினார்.
சமூக தொழில்முனைவோர் வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை
மாறாக விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துதல், உள்ளடக்கிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதும் அடங்கும்.
மேலும் நெறிமுறை வணிக நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்ற தெளிவான சமூக நோக்கத்துடன் செயல்படுகின்றன.
தேசிய தொழில்முனைவோர் நிறுவனம் ஏற்பாடு செய்த சமூக தொழில்முனைவோர் கருத்தரங்கு தொடக்க விழாவில் டத்தோஸ்ரீ ரமணன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 11:09 pm
விபத்தில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து என் மகள் தனலெட்சுமி இன்னும் மீளவில்லை: தாய் உருக்கம்
July 8, 2025, 5:29 pm
பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகரைக் காவல்துறை தேடி வருகிறது
July 8, 2025, 3:27 pm
பகாங் சுல்தானை உட்படுத்திய காணொலி: போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டது
July 8, 2025, 1:10 pm