நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்திற்கு தற்காலிக திட்டங்கள், டோக்கன் ஒதுக்கீடுகளை விட தேசிய வளர்ச்சியில் நிரந்தர இடம் தேவை: கணபதிராவ்

கிள்ளான்:

இந்திய சமூகத்திற்கு தற்காலிக திட்டங்கள், டோக்கன் ஒதுக்கீடுகளை விட  தேசிய வளர்ச்சியில் நிரந்தர இடம் தேவைப்படுகிறது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் இதனை கூறினார்.

13ஆவது மலேசியா திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு இந்த தருணம் மிகவும் முக்கியமானது என்பதை நாம் உணர வேண்டும்.

மடானி அரசாங்கத்தின் கீழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் வரலாற்று, கட்டமைப்பு சவால்களை நிவர்த்தி செய்ய நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மித்ரா நிதி, கல்வி, ஆலய நில உதவி, திறன் பயிற்சி, சமூக திட்டங்கள் வாயிலாக இந்தியர்கள் தேசிய வளர்ச்சியில் சேர்க்க அரசாங்கம் முனைப்பை காட்டியுள்ளது.

இந்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அவை முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. ஆனால் அது நேர்மையாக இருக்க வேண்டும்.

கட்டமைப்பு இல்லாமல், நிலைத்தன்மை இல்லாமல், பொறுப்புக்கூறல் இல்லாமல் இம்முயற்சிகள் உண்மையான முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

இந்திய சமூகத்திற்கு தற்காலிக திட்டங்கள், டோக்கன் ஒதுக்கீடுகளை விட தேசிய வளர்ச்சியில் ஒரு நிரந்தர இடம் தேவைப்படுகிறது.

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினராக, நாடாளுமன்றத்திற்குள் உட்பட கிடைக்கக்கூடிய ஒவ்வொரு தளத்திலும், அரசாங்க விவாதங்களிலும், அடிமட்டத்திலும் நான் தொடர்ந்து இந்தக் கேள்வியை எழுப்பி வருகிறேன்.

உயர்கல்வியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது உட்பட பல பிரச்சினைகளை நான் எடுத்துக்காட்டியுள்ளேன்.

ஆனால் இவ்விவகாரத்தில் நான் மட்டுமே குரலாக இருக்க முடியாது. இருக்கவும் கூடாது.

அனைத்து அரசியல் சார்புகளிலிருந்தும் அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று 13ஆவது மலேசியத் திட்டம் தாக்கல் செய்யப்படும்போது முழுமையாக மதிப்பாய்வு செய்யுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கணபதிராவ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset