
செய்திகள் ASEAN Malaysia 2025
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு, மியான்மார் நெருக்கடி குறித்து ஆசியான் கூட்டத்தில் முக்கிய விவகாரமாக பேசப்படும்
கோலாலம்பூர்:
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு, மியன்மார் நாட்டில் நிலவும் நெருக்கடிகள் குறித்து ஆசியான் உச்சநிலை மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே விவகாரத்தை ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது
தற்சமயம் தென்கிழக்காசியா நாடுகள் யாவும் நிச்சயமற்ற புவிஅரசியல் சூழலை எதிர்கொண்டும் நிலையில்லா பொருளாதார சூழலையும் கடந்து வருகின்றனர்.
இதில் மியன்மார் நாட்டின் நெருக்கடி குறித்து ஆசியானில் விவாதிக்கப்படவுள்ளது. மியன்மாரில் அமைதியை கொண்டு வர ஆசியான் தீர்வை எட்டும் என்று ஆசியான் கூட்டமைப்பின் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு குறித்து மலேசியா, ஆசியான் ஆகிய கூட்டமைப்பின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை.
இருந்தும், அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆசியான் நாடுகள் தொடர்ந்து பொருளாதார நிலைமையைக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்