நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்:

மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை என அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் திட்டவட்டமாக கூறினார்.

மடானி அரசாங்கத்தில் இரு அமைச்சர்கள் விலகி விட்டனர். 

இதனால் விரைவில் நடக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் மஇகாவுக்கு  வாய்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி வேண்டாம். கால தாமதமாகி விட்டது. இனியும் அமைச்சர் பதவியை ஏற்பது அர்த்தமற்றது.

மேலும் நாங்கள் இப்போது தான் நிம்மதியாக உள்ளோம். யாரும் எங்களை திட்டுவதில்லை.

யார் தகுதியானவர்களோ அவர்களுக்கு அப்பதவியை அரசு கொடுக்கட்டும் என்று அவர் கூறினார்.

13ஆவது மலேசியத் திட்டத்திற்கு பல பரிந்துரைகளை மஇகா வழங்கியுள்ளது.

இந்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்று உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என மஇகா நம்புகிறது.

மேலும் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான பல தரப்பினரிடம் இருந்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.

யார் வேண்டுமானாலும் பரிந்துரைகளை கொடுக்கட்டும். ஆனால் அது அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதா?.

குறிப்பாக அப்பரிந்துரைகள் அமல்படுத்தப்படுகிறதா என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன், நூருல் இசா விவகாரத்தில் கூறியதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக மஇகா பல நடவடிக்கைகளை அமைதியாக மேற்கொண்டது.

ஆனால் மஇகா ஒன்ருமே செய்யவில்லை என குற்றம் சாட்டினர்.

அந்நிலை நூருல் இசாவுக்கு வரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் டத்தோஸ்ரீ சரவணன் அவ்வாறு கூறினார்.

ஆக இந்த விவகாரத்தை யாரும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.மேலும்

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset