
செய்திகள் மலேசியா
அமலாக்கத்தில் சிக்கல் நீடிக்கும் வரை எந்த திட்டமும் சமுதாயத்தை மேம்படுத்தாது: டத்தோ டி. மோகன்
பண்டார் சௌஜனா புத்ரா:
அமலாக்கத்தில் சிக்கல் நீடிக்கும் வரை எந்த திட்டமும் சமுதாயத்தை மேம்படுத்தாது.
மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் காலக்கட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு என புளூபிரிண்ட் உருவாக்கப்பட்டது.
இந்த புளூபிரிண்ட்டை அரசாங்கம் அமல்படுத்தி இருந்தாலே இந்திய சமூகம் உருமாற்றம் கண்டிருக்கும்.
ஆனால் அந்த புளூபிரிண்ட் அப்படியே மறைந்து போய்விட்டது.
இப்போது 13ஆவது மலேசிய திட்டத்திற்கு மாறி மாறி பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
எத்தனை பரிந்துரைகளும் திட்டங்களும் வந்தாலும் அமலாக்கத்தில் சிக்கல் இருந்தால் சமுதாயத்தை உருமாற்ற முடியாது.
ஆகவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை காண வேண்டும்.
பண்டார் சௌஜானா புத்ராவில் அமைந்துள்ள ஷஹார் கடையின் திறப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ மோகன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 7, 2025, 12:35 am
மஇகாவுக்கு இனி அமைச்சர் பதவி தேவையில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
July 6, 2025, 3:45 pm
பிரிக்ஸ் மலேசியாவுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை வழங்குகிறது: பிரதமர் அன்வார்
July 6, 2025, 3:24 pm
சபா சட்டமன்றம் நவம்பர் 11-ஆம் தேதி கலையும்: சபாநாயகர்
July 6, 2025, 12:21 pm
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
July 6, 2025, 11:25 am