நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாணவி தவனேஸ்வரியின் மரணம் குறித்து போலிசார் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: டத்தோஸ்ரீ சஞ்சீவன்

கோலாலம்பூர்:

மாணவி தவனேஸ்வரியின் மரணம் குறித்து போலிசார் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் இதனை வலியுறுத்தினார்.

கடந்த ஜூலை 2ஆம் தேதி பண்டார் பாரு செந்தூலில் உள்ள பங்சாபூரி மாவாரில் உள்ள ஒரு விடுதி கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்த தனியார் கல்லூரி மாணவியான தவனேஸ்வரி காலமானார்.

தவனேஸ்வரியின் மரணம் குறித்து முழுமையான, வெளிப்படையான, நியாயமான விசாரணையை போலிசார் நடத்த வேண்டும்.

இந்த சம்பவத்தில் சந்தேகங்களையும், குற்றவியல் கூறுகளை எழுப்பும் பல ஆரம்ப தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட 21 வயதான தவனேஸ்வரியின் உதடுகளில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் நடப்பதற்கு முன்பு பாதிக்கப்பட்டவரே கடைசியாக சந்தேகத்திற்கிடமான செய்தியைப் பதிவேற்றியதாகவும் அவர் கூறினார்.

இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல. முழுமையான விசாரணை இல்லாமல் நாம் கடந்து செல்ல முடியுமா? 

இன்னும் படித்துக் கொண்டிருக்கும், பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு மாணவியின் மரணம் குறித்து அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இன்று நான் மறைந்த தவனேஸின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். 

அவரது தாயின் கண்ணீர், தந்தையின் துயரம் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததாக க உள்ளது. 

கண் இமைக்கும் நேரத்தில் கற்பனை செய்து பார்த்தால் சில குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

நீதி என்பது உயிருள்ளவர்களுக்கு மட்டுமல்ல, இறந்து போனவர்களுக்கும் உரியது. 

ஏதாவது தவறு நடந்திருந்தால், அவருக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்.

ஆகவே  இந்த வழக்கை திடீர் மரணம்  என வகைப்படுத்தி மூடிமறைக்கக்  கூடாது.

முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ சஞ்சீவன் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset