நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்

ரியோ டி ஜெனிரோ:

பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இன்று தொடங்கியுள்ளார்.

பிரதமர் இன்று தொடங்கி திங்கட்கிழமை வரை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 17ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வார்.

இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைவராக பிரேசில் கூட்டாட்சிக் குடியரசின் தலைவர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் அன்வார் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்த பயணத்துல் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ்,  போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், மிரி நாடாளுமன்ற உறுப்பினர் சியூ சூன் மான்,  பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முகமது ஷஹார் அப்துல்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

17ஆவது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டில் மலேசியா பங்கேற்பது பிரிக்ஸ் கூட்டாளர் நாடாகவும், ஆசியான் 2025 இன் தலைவராகவும் உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset