நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் அறிவியல் ஐந்திரம் திட்டத்தின் வாயிலாக 80,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர்: பிரபாகரன்

பாங்கி:

மித்ராவின் அறிவியல் ஐந்திரம் திட்டத்தின் வாயிலாக 80,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயனடைந்தனர்.

மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பி. பிரபாகரன் இதனை கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடயே அறிவியல், ஸ்டேம் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவியல் ஐந்திரம் திட்டம் தொடங்கப்பட்டது.

மலேசிய பயோ தொழில்நுட்ப தகவல் மையத்துடன் இணைந்து இத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இத் திட்டத்திற்காக மொத்தம் 7 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது.

குறிப்பாக இத் திட்டத்தின்கீழ் 525 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 80 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்றனர்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான சஞ்சிகைகள் வழங்கப்பட்டன.

மேலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் இறுதி சுற்று போட்டிகளும் இன்று நடைபெற்றது.

இதுபோன்ற போட்டிகளும் நிகழ்ச்சிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.

குறிப்பாக  தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே ஸ்டேம் துறை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது என்று பிரபாகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset