
செய்திகள் மலேசியா
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
பாங்கி:
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா ஒன்றும் கத்திரிக்காய் வியாபாரம் அல்ல.
மித்ரா சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் பி.பிரபாகரன் இதனை வலியுறுத்தினார்.
மித்ரா கிராண்ட் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூக ஊடகங்களில் என்னை கடுமையாக சாடி வருகின்றனர். இவை அனைத்தும் எனக்கு தெரியும்.
ஆனால் மித்ரா முறையாக செயல்பட்டு வருவது அவர்களுக்கு தெரியாது.
மித்ராவின் அனைத்து திட்டங்களும் அது தொடர்பான அறிக்கைகளும் அந்த பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது 2024ஆம் ஆண்டுக்கான மித்ராவின் அறிக்கை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
மித்ரா தொடர்பான விவகாரத்தில் மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
மேலும் கிராண்ட்டுக்கு விண்ணப்பம் செய்த பல அரசு சார இயக்கங்கள் மித்ராவின் விதிமுறைகளை பின்பற்றவில்லை.
ஏன் பல அரசு சாரா இயக்கங்களுக்கு முறையான கணக்கறிக்கைகள் கூட இல்லை.
இந்த சூழ்நிலையில் எப்படி நிதி வழங்க முடியும். அந்த நிதியை கொண்டு சம்பந்தப்பட்ட அரசு சாரா இயக்கங்கள் எப்படி மக்களுக்கான திட்டங்களை மேற்கொள்ள முடியும்.
இதன் அடிப்படையில் தான் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஆக மித்ரா தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இது போன்ற உண்மை நிலவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இது என்னுடைய மிகப்பெரிய கோரிக்கையாக உள்ளது என்று பிரபாகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 9:38 am
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத வாகனச் சேவை வழங்கிய 22 பேர் மீது நடவடிக்கை
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm