நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை ஒரு வெற்றியாக கருதுகிறேன்: அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வருணனை 

பாரிஸ்:

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை ஒரு வெற்றியாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். இரு நாடுகளும் அனைத்துத் துறைகளிலும் கூட்டாண்மைகளை மீண்டும் புதுப்பித்துள்ளன.

François Bayrou, பிற முக்கிய அதிகாரிகளுடனான உயர்மட்ட சந்திப்புகள், சோர்போன் பல்கலைக்கழகத்தில் பிரதமர் அன்வார் ஆற்றிய முக்கியமான உரை, சிவில் சமூகத் தலைவர்களுடனான அவரது பரிமாற்றங்கள், பிரெஞ்சு வணிகங்களுடனான அவரது சந்திப்புகள் மூலம் இது எட்டப்பட்டது என்று பிரெஞ்சுப் பிரதமர்,  கூறினார்.

 15 ஆண்டுகளுக்கு பிறகு மலேசிய உயர் மட்ட குழுவினர் பிரதமருடன்  வருகை தந்ததால் இது அர்த்தமுள்ளதாக அமைந்தது என்று மக்ரோன் கூறினார்.

கனிமங்கள், விமான கொள்முதல் போன்ற துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதைக் கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

"பல்கலைக்கழகத்தில் உங்கள் (அன்வார்) உரையையும் நாங்கள் கேட்டோம், அது மிக முக்கியமான தருணம்" என்று நேற்று இங்குள்ள எலிசி அரண்மனையில் அன்வாருடன் இருதரப்பு சந்திப்பை நடத்திய பின்னர்  செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset