நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈகோவை தூக்கி எறியுங்கள்; ஹிஷாமுடின், கைரி, ஷாஹ்ரில் ஆகியோரை மீண்டும் அம்னோக்குள் கொண்டு வர பாலமாக இருக்க தயார்: அக்மால்

சிரம்பான்:

டத்தோஶ்ரீ ஹிஷாமுடின், கைரி, ஷாஹ்ரில் ஆகியோரை மீண்டும் அம்னோக்குள் கொண்டு வர பாலமாக இருக்க நான் தயாராக உள்ளேன்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே இதனை கூறினார்.

கட்சியில் இருந்து இடைநீக்கம்,  நீக்கப்பட்ட முன்னாள் அம்னோ தலைவர்கள் இன்னும் கட்சியை நேசித்தால் தங்கள் ஈகோவை தூக்கி எறிய வேண்டும்.

அம்னோ  தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, நடவடிக்கைக்கு உட்பட்டவர்களிடமிருந்து முறையீடுகளை ஏற்க விருப்பம் தெரிவித்ததாக அவர் கூறினார்.

மேலும் அம்னோ அனைத்து மலாய்க்காரர்களுக்கும் சொந்தமானது. வலிமையைக் கட்டியெழுப்ப அது மீண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

இதனால் கட்சியின் பலத்தை கட்டியெழுப்ப அவர்கள் நமக்குத் தேவை என்று அக்மால் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset