
செய்திகள் மலேசியா
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
ரியோ டி ஜெனிரோ:
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்துவார்.
பிரேசிலில் உள்ள மலேசிய தூதரகத்தின் செயல் தலைவர் டத்தோ முகமது அலி செலாமாட் இதனை தெரிவித்தார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பிரிக்ஸ் தலைவர்கள் உச்சநிலை மாநாடு நாளை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் உலக நிலப்பரப்பில் அதிகரித்து வரும் துருவமுனைப்புக்கு மத்தியில், பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும்,, மிகவும் சமநிலையான, உள்ளடக்கிய உலக ஒழுங்கிற்கான மலேசியாவின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்துவார்.
பிரிக்ஸ் கூட்டாளர் நாடுகளின் அமர்வின் போது, பன்முகத்தன்மை, பொருளாதாரம்-நிதி மற்றும் செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு தேசிய அறிக்கையை பிரதமர் வழங்குவார்.
மேலும் நிலையான நிர்வாகத்திற்கான உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டில், சுற்றுச்சூழல், சிஓபி 30, உலகளாவிய சுகாதாரம் என்ற தலைப்பில் மற்றொரு தேசிய அறிக்கையை பிரதமர் வழங்குவார் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:08 pm