நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சாலையின் உயர வரம்பு தடுப்புக் கம்பத்தை பேருந்து மோதியது: 7 பேர் காயம்

சிரம்பான்:

சாலையின் உயர வரம்புத் தடுப்புக் கம்பத்தை விரைவு பேருந்து மோதிய சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட ஏழு பேர் லேசான காயமடைந்தனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு நீலாயில் உள்ள ஜாலான் அராப் மலேசியனில் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து இரவு 10.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

மேலும் இச்சம்பவத்தில் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள், மூன்று பெண்கள் பாதிக்கக்கப்பட்டனர்.

19 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து காஜாங்கிலிருந்து மலாக்காவுக்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் செர்டாங் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நீலாய் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு பிரிவின் மூத்த தீயணைப்பு அதிகாரி அஸ்மி ஹமீத் இதனை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset