நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்

லண்டன்: 

கார் விபத்தில் மறைந்த போர்த்துகீசிய கால்பந்து வீரரும் லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரருமான டியோகோ ஜோத்தாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

டியோகோ ஜோத்தா-வின் மரணச் செய்தி வெளியானது முதல் அரங்கத்துக்கு வெளியே ரசிகர்கள் பூக்கள், ஜோட்டாவின் காற்பந்து ஜெர்சிகள் (Jersey), பலூன்கள், கொடிகள் ஆகியவற்றை வைத்து வருகின்றனர். 

சிலர் அனுதாப வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர்.

28 வயதான ஜோட்டாவின் மறைவு லிவர்பூல் அணிக்கும் போர்த்துகல் தேசிய அணிக்கும் பேரிழப்பு என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, நேற்று ஸ்பெயினின் ஸமோரா நகர் அருகே நடந்த கார் விபத்தில் டியாகோவும் அவரது இளைய சகோதர் அண்டிரேவும் மாண்டனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset