செய்திகள் விளையாட்டு
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
கோலாலம்பூர்:
நாட்டின் ஆண்கள் ஒற்றையர் பூப்பந்து வீரர் லீ ஸீ ஜியா, சுவிட்சர்லாந்து போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
இன்று அதிகாலை பாசல் நகரில் நடைபெற்ற போட்டியில், சிங்கப்பூரின் ஜேசன் தே அவரிடம் ஸீ ஜியா 12–21, 14–21 என்ற கணக்கில் 28 நிமிடங்களில் தோல்வியடைந்தார். இதன் மூலம் சூப்பர் 300 தரவரிசை கொண்ட இந்தப் போட்டியில் அவரது பயணம் ஆரம்பத்திலேயே முடிவடைந்தது.
இந்த தோல்வியால், 27 வயதான ஸீ ஜியாவின் உலக சுற்றுப்போட்டிகளில் மீண்டும் பட்டம் வெல்லும் முயற்சியும் தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது. அவர் கடைசியாக 2024-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா திறந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார்.
அலோர் ஸ்தார் நகரைச் சேர்ந்த ஸீ ஜியா, தகுதி சுற்றில் ஜப்பானின் மினொரு கோகா, டென்மார்க்கின் டிட்லெவ் ஜேகர் ஹோம் ஆகியோரை வீழ்த்தி முதன்மை சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றுவதற்கு 2026 ஆம் ஆண்டே சரியான தருணம்: காஃபு நம்பிக்கை
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
