நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாரம்பரிய யோகாசன போட்டி 2025 ஜொகூரில் முதல் முறையாக நடைபெறவுள்ளது

ஜொகூர் பாரு:

2025-ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய யோகாசன போட்டி முதல் முறையாக ஜொகூர் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை ஜொகூர் பதஞ்சலி அஷ்டாங்க யோகாசன பயிற்சி கழகம், அனைத்துலக யோகா சமேளனம், அனைத்துலக யோகா விளையாட்டு சமேளனம் மற்றும் அனைத்துலக விளையாட்டு யோகா சமேளனத்துடன் இணைந்து ஏற்று நடத்துகிறது.

ஆகஸ்ட் 9-ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இப்போட்டி உலு திராமிலுள்ள ஶ்ரீ மகா முனிஸ்வரர் தேவஸ்தானத்தில் நடைபெறவுள்ளது.

4 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த யோகா போட்டியில் பங்கேற்கலாம்.

துவக்க நிலை மற்றும் மேம்பட்ட நிலை என இரண்டு நிலைகளில் யோகா போட்டி நடத்தப்பட உள்ளன. 

மேம்பட்ட நிலை மாணவர்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள். 

யோகா போட்டி 11 தனித்தனி வயது பிரிவுகளில் நடைபெறுகிறது. எனவே போட்டியாளர்கள் தங்கள் வயதுக்கு ஏற்ப பிரிவில் பங்கேற்கலாம். 

நாடு முழுவதுமுள்ள யோகா பயிற்சியாளர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். 

இந்த போட்டிக்காக நியமிக்கப்பட்ட 5 நடுவர்களில், 4 பேர் இந்தியாவிலிருந்தும் ஒருவர் உள்ளூரை சேர்ந்தவராவார்.

2025-ஆம் ஆண்டுக்கான பாரம்பரிய யோகாசன போட்டி தொடர்பான மேல் விபரங்களுக்கு Yoga Ratna Master Thamarai Selvi Sukumaran-யை 012-793 3205 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset