நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால்  ரொட்டி சானாய் பரிமாறுவதற்கு கூட கடினமாகிறது; அரசு நிரந்தர தீர்வை வழங்க வேண்டும்: பிரிமாஸ் 

கோலாலம்பூர்:

2026 மலேசிய வருகை ஆண்டுக்கு முன்னதாக உணவகத் துறைக்காக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.

பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ கோவிந்தசாமி இதனை வலியுறுத்தினார்.

மலேசியா முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய உணவகங்கள் இயங்கி வருகின்றன.

இந்த உணவகங்களை  பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிமாஸின் தலைவர் என்ற முறையில் எங்களின் வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்து கொள்கிறேன்.

அந்நியத் தொழிலாளர்களின் பற்றாக்குறை சேவை தரம், சுகாதாரம், செயல்பாட்டு திறன்களை  கடுமையாக பாதிக்கிறது.

பல உணவகங்கள் செயல்பாட்டு நேரத்தைக் குறைக்கவும், உணவு வகைகளை  குறைக்கவும், சில சந்தர்ப்பங்களில் முற்றிலுமாக மூடவும் கட்டாயப்படுத்தப்படுகின்றன.

மக்களுக்கு சேவை செய்வதில் இந்திய உணவகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன,  குறிப்பாக பி40 மக்களுக்கு பெரும் பயனாக உள்ளன.

இருப்பினும் போதுமான அந்நியத் தொழிலாளர்கள் இல்லாததால் பிரதான உணவாக ரொட்டி சானாய்  கூட பரிமாறுவது கடினமாகி வருகிறது.

மேலும் இதனை சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பது கடினமாகிறது. குறிப்பாக  வாடிக்கையாளர்களை  திருப்திப்படுத்த முடியவில்லை.

எஸ்எஸ்டி வரி சேகரிப்பதில் உணவகத் துறையும்  நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கை அளிக்கிது.

ஆனால் அந்நியத் தொழிலாளர்  விவகாரங்களில் ஒருபோதும் எங்களுக்கு எந்த முன்னுரிமையும் கிடைக்கவில்லை.

இந்நிலை நீடித்தால் பல உணவகங்களில் மூட வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால் நாட்டின் வருவாயையும் பாதுக்கக்கூடும்.

ஆகவே இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் முழுமையாக தீர்வு காண வேண்டும். 2026 மலேசிய வருகை ஆண்டுக்கு முன் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் முழு தீர்வை வழங்க வேண்டும்.

குறிப்பாக உணவகத்துறைக்கு அந்நியத் தொழிலாளர் அனுமதி விரைவுப்படுத்த வேண்டும். மேலும் உணவகத்துறையை தேசிய வருவாய் துறையாக அறிவிக்க வேண்டும்.

இதுவே எங்களின் கோரிக்கையாகும் என்று டத்தோ கோவிந்தசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset