நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்

புது டெல்லி:

ஒவ்வொரு இந்தியர் மீதும் சராசரி கடன் தொகை ரூ.3.9 லட்சத்தில் இருந்து ரூ.4.8 லட்சமாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக  அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கியுள்ளது.

அனைத்து கொள்கைகளும் முதலாளித்துவ நண்பர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகளை இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் தனிநபர் கடன் ரூ.90,000 அதிகரித்து ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்துவதில் மட்டுமே 25.7% வருமானம் செல்கிறது.

அதிகபட்சமாக 55% கடன்கள் கிரெடிட் கார்டுகள், மொபைல் EMIகள் போன்றவற்றுக்குச் செல்கின்றன, அதாவது இந்த பணவீக்கத்தில், குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் வாழ முடியாமல் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாதுகாப்பற்ற கடன்கள் 25% ஐத் தாண்டிவிட்டன.

இந்தியா, பிற நாடுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் 736.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் என தெரிவித்துள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset