
செய்திகள் இந்தியா
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
புது டெல்லி:
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை நடத்தப்பட்டது.
வட மாநிலங்களில் ஜூலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்குவதால் 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி யாத்திரை நடைபெறும்.
இந்த யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள கடைகளை ஹிந்து அல்லாதவர்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த கடை உரிமையாளரின் பெயர், கைப்பேசி எண் போன்றவற்றை கடைக்கு முன்னர் எழுதி வைக்க வேண்டும், யாத்திரை செல்லும் பாதைகளில் இறைச்சிக் கடைகள் வைக்க கூடாது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள பண்டிட் வைஷ்ணவ் தாபாவில் யோகா சாதனாவை சேர்ந்த சீடர்கள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையின் உரிமையாளரின் பெயர் முஸ்லிம் என்று ஆதார் அட்டை மூலம் தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் ஊழியர்களின் கீழாடையை அவிழ்த்து சீடர்கள் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து யாஷ்வீர் மஹராஜின் 6 சீடர்களிடம் விளக்கம் கேட்டு முசாபர்நகர் புதுமண்டி போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm