நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது

புது டெல்லி:

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஜன்னல் பிரேம் நடுவானில் விலகியது. இதுகுறித்த வியியோ சமூக வலைதளங்களில் வைரலானதால்ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

கோவாவில் இருந்து புனேவுக்கு ஜூலை 1ம் தேதி சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது  ஜன்னலின் பிரேம் விலகியது.

இதை பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார். இது வைரலான நிலையில் அந்த விமானம் புனேவில் தரையிறங்கிய பிறகு ஜன்னல் பிரேம் பொருத்தப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், உட்புற ஜன்னல் பிரேம் விலகியதால் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பில்லை. நிழலுக்காக ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த பிரேமாகும். விமானத்தில் கேபின் அழுத்தம் இயல்பாகவே இருந்தது என்று தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset