நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய 2 சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்

ஜார்ஜ்டவுன்:

பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய 2 சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

பினாங்கு மாநில போலிஸ் தலைவர் முகமட் அல்வி ஜைனல் அபிடின் இதனை கூறினார்.

பட்டர்வொர்த்தின் சுங்கை நியோரில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே தனது குழந்தைக்காகக் காத்திருந்த ஒருவரை நோக்கி நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக நம்பப்படும் இரண்டு சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

மாலை 5.40 மணியளவில் நடந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் வாகனத்தை அணுகி ஐந்து முறை துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கு காயம் ஏற்படவில்லை.

மேலும் இந்த சம்பவம் துப்பாக்கி (கடுமையான தண்டனைகள்) சட்டம் 1971 இன் பிரிவு 3 மற்றும் கொலை முயற்சிக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

சந்தேக நபரையும் சம்பவத்திற்கான காரணத்தையும் அடையாளம் காண போலிசார் முயற்சித்து வருகின்றனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset