நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலானில் பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகளில் மது அருந்துவதற்கு தடை: மந்திரி புசார்

சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகளில்  மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் அரசாங்கம் பொழுதுபோக்கு பூங்காக்கள், குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள், பொது மைதானங்கள்,  கடற்கரைகளில் மதுபானங்களை உட்கொள்வதை உடனடியாக தடை செய்துள்ளது.

பொழுதுபோக்குக்காக இடங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களின் உணர்திறனை மதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நகராண்மை கழக அதிகாரிகள், போலிஸ் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்சத்திற்கு கீழ்ப்படியாதவர்கள் மீது அதிகபட்சமாக 2,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அமினுடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset