நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு

மும்பை:

மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிவாசல்களின் பாங்குகளை செயலி மூலம் செல்போன்களில் ஒலிக்கத் துவங்கி உள்ளன.

பள்ளிவாசல்களில் 5 நேர தொழுகைகளுக்கு  பாங்கு ஓசை மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது.

இந்து மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களிலும் ஒலி பெருக்கிகள் மூலம் பக்திப் பாடல்கள், பிரசங்கம் ஒலிப்பரப்பப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிகளின் சப்த அளவு குறைக்க நீதிமன்றம் உத்தரவிட்டனர். இதனடிப்படையில் ஒலி பெருக்கிகளுக்கு மும்பை போலீஸார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இது முஸ்லிம்களுக்கு எதிரானது என வழக்கு தொடர பல்வேறு அமைப்புகள் முடிவுசெய்துள்ளன.

இந்த தடையை தொழில்நுட்ப உதவியுடன் மும்பையின் மாஹிம் பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் தாண்டியுள்ளது.

அந்த பள்ளிவாசல் சார்பில் செயலியின் மூலம் செல்போனுக்கு பாங்கு ஒலிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியில் மும்பையின் ஆறு மசூதிகள் பதிவு செய்து பாங்குகளை ஒலிபரப்பத் துவங்கி உள்ளன.

இதன் மூலம் முஸ்லிம்கள் தம் வீட்டிலிருந்தே அஸானை கேட்க இந்த செயலி உதவுகிறது.

இந்த பாங்கு ஒலிக்கான செயலியை தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

‘ஆன்லைன் அஸான்’ எனும் இந்த செயலியில் தமிழ்நாட்டில் சுமார் 250 பள்ளிவாசல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset