
செய்திகள் இந்தியா
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
கவுஹாத்தி:
அசாம் மாநிலம் கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) சமீபத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2025-ம் ஆண்டில் இதுவரை, இந்த மருத்துவமனையில் 44 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து பேசிய கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் அச்சுத் சந்திர பைஷ்யா, “கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகியுள்ளது.
இதுவரை, எங்கள் மருத்துவமனையில் 44 பேருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது, இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44 பேரில் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், நல்பாரியை சேர்ந்த 10 பேர், தர்ரங்கை சேர்ந்த 7 பேர் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர்” என்றார்.
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2015 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அசாமில் 840-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 4:56 pm
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
July 1, 2025, 10:18 pm