நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முகநூலில் அவதூறு கருத்தைப் பதிவிட்ட தோட்டத்தொழிலாளி மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது 

சிப்பாங்: 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முகநூலில் அவதூறு கருத்தைப் பதிவிட்ட தோட்டத்தொழிலாளி ஒருவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 

இருப்பினும், தங்களுக்கு எதிரான குற்றத்தை மறுத்து அந்த தோட்டத்தொழிலாளி விசாரணை கோரினார். 

நீதிபதி அஹ்மத் ஃபுவாட் ஒத்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்ட 37 வயதான முஹம்மத் ஃபைசால் முஹம்மத் யூசோஃப் குற்றத்தை மறுத்தார். 

முஹம்மத் ஃபைசால் யுசோப் என்ற முகநூல் கணக்கு பெயரில் ஓர் அவதூறு கூற்றை வெளியிட்டதாக அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

1998 தொடர்பு, பல்லூடக சட்டத்தின் செக்‌ஷன் 233(3)இன் கீழ் அவர் மீது வழக்கு விசாரிக்கப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset