
செய்திகள் இந்தியா
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
புதுடில்லி:
புதுடில்லியிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவிற்குச் (Vienna) சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 900 அடி வரை கீழே இறங்கியது தொடர்பாக விமானிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
AI-187 விமானம் சென்ற மாதம் (ஜூன் 2025) 14ஆம் தேதி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
மோசமான வானிலையால் திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வரத் தொடங்கியது.
இருப்பினும் விமானிகள் உடனடியாக விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
அது சுமார் 9 மணி நேரத்திற்குப் பின்னர் வியன்னாவில் பத்திரமாகத் தரையிறங்கியது.
இந்த சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. முடிவு வரும் வரை விமானிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 30, 2025, 12:39 am
காற்று மாசை குறைத்தால் மூன்றரை ஆண்டுகள் இந்தியர்கள் கூடுதலாக வாழலாம்: ஆய்வில் தகவல்
August 28, 2025, 11:22 pm
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
August 28, 2025, 11:13 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
August 28, 2025, 10:56 pm
கூகுள் மேப்பை பின் தொடர்ந்து சென்று ஆற்றில் கவிழந்த கார்: 3 பேர் பலி
August 28, 2025, 10:53 pm
டிரம்ப் வரி விதிப்பை சமாளிக்க 40 நாடுகளுக்கு தூதர்களை அனுப்ப இந்தியா திட்டம்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் பேச்சு
August 27, 2025, 5:48 pm
மும்பையில் கோலாகலமாக தொடங்கிய விநாயகர் விழா; பாதுகாப்பு பணியில் 17000 போலீஸார்
August 27, 2025, 4:11 pm
இந்தியா பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி அமலாகியது
August 27, 2025, 3:39 pm
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
August 27, 2025, 1:52 pm