நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேருந்தைச் செலுத்தியவாறு கேம் விளையாடிய ஓட்டுநரின் காணொலி வைரல் 

ஜார்ஜ் டவுன்:

பேருந்தைச் செலுத்தியவாறு தொலைப்பேசியில் கேம் விளையாடும் காணொலி சமூக ஊடகங்களில் வைரலானது. 

Tan Chia Yong என்ற உள்ளூர் ஊடகவியலாளரின் முகநூல் பகிரப்பட்டுள்ள காணொலியில் பேருந்து ஓட்டுநர் இரு கைகளையும்  
ஸ்டியரிங்கில் வைத்துத் தொலைப்பேசியை பிடித்தவாறே கேம் விளையாடுவதைக் காண முடிந்தது.

ஜூன் 22-ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பினாங்கின் பட்டர்வொர்த்திற்கான பயணத்தின் போது பேருந்தில் இருந்த சீனாவைச் சேர்ந்த தனது நண்பர் இக்காணொலியைப் பகிர்ந்ததாக Tan Chia Yong  தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கிடம் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

சாலை மீது முழுமையான கவனம் செலுத்தாமல் தொலைப்பேசியில் கேம் விளையாடிய அவரின் பொறுப்பற்ற செயலுக்கு பொது மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் சிலர் பேருந்து ஓட்டுநரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்தனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset