நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்

புது டெல்லி: 

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம், போபாலில் விஷவாயு கசிந்த ஆலையின் நச்சுக் கழிவுகள் தற்போது எரிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள ஓர் ஆலையில் வைத்து 337 டன் கழிவுகளும் எரித்து சாம்பலாக்கப்பட்டன.

போபாலில் யூனியன் கார்பைட் தயாரிப்பு ஆலையில் நடைபெற்ற விஷவாயு கசிவில் 5,479 பேர் உயிரிழந்தனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

கடந்த 40 ஆண்டுகளாக நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தன.

உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தற்போது இந்தக் கழிவுகள் அழிக்கப்பட்டுள்ளன.
எரிக்கப்பட்ட பிறகு கிடைத்த சாம்பல் பாதுகாப்பான இடத்தில் மண்ணில் புதைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset