நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது

புது டெல்லி: 

இந்தியாவில் எக்ஸ்பிரஸ் ரயில்களின்  கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

மெயில் மற்றும் விரைவு ரயில்களில் சாதாரண வகுப்புகளுக்கான கட்டணம் கி.மீ.க்கு ஒரு காசு, ஏசி வகுப்புகளுக்கு கி.மீ.க்கு 2 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.  

இரண்டாம் வகுப்புக்கான பயணக் கட்டணம் முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு உயர்த்தப்படவில்லை.

மாறாக, 500 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் 0.50 காசு வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தட்கல் பயணச் சீட்டு முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு செய்வது கட்டாயமாக்கும் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset