
செய்திகள் இந்தியா
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பாஷமிலாராம் தொழிற்பேட்டையில் உள்ள மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ரசாயன ஆலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, 13 பேர் இடிபாடுகளுக்கு இடையேயிருந்து மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த அனைத்து தொழிலாளர்களும் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வெடி விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm