
செய்திகள் இந்தியா
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
புது டெல்லி:
பிகாரில் 2003ம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் உள்ளவர்கள் இந்தியர்கள் என நிரூபிக்க ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2025 இறுதிக்குள் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கணக்கெடுப்புப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று விநியோகிக்க உள்ளனர்.
அந்தப் படிவங்களில் வாக்காளரின் பெயர், பழைய புகைப்படம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் ஏற்கெனவே அச்சிடப்பட்டிருக்கும்.
அந்தப் படிவத்தில் வாக்காளரின் புதிய புகைப்படம் ஒட்டப்பட்டு, பிறந்த தேதி, ஆதார் எண், பெற்றோர், வாழ்க்கைத் துணையின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm