நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உத்தர பிரதேசத்தில் கதாகாலட்சேபம் செய்த யாதவ இனத்தவர் மீது தாக்குதல்: 2 சமூகத்துக்கு இடையே பெரிதாகும் பிரச்சினை

புதுடெல்லி: 

உத்தர பிரதேச மாநிலத்​தில் 15 ஆண்​டு​களாக கதாகாலட்​சேபம் செய்​யும் முகுட்​மணி சிங் யாதவ் மற்​றும் அவரது உதவி​யாளர் சந்த் குமார் யாதவ் தாக்​கப்​பட்​டனர். முகுட்​மணி​யின் தலை​முடியை மொட்​டையடித்த உயர் சாதிவெறி கும்​பலை சேர்ந்த  4 இளைஞர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பிராமணர் அல்​லாத முகுட்​மணி கதாகாலட்​சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரி​வித்து தாக்​குதல் நடந்​துள்​ளது. இதை சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்​டித்​துள்​ளனர். 

இதற்​கிடை​யில், முகுட்​மணி மீது பாலியல், பிராமணர் என பொய் கூறிய​தாக வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இதுகுறித்து உ.பி.​யின் மற்​றொரு பிரபல கதாகாலட்​சேபகர் லவ்லி சாஸ்​திரி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முகுட்​மணி மீது நடத்​தப்​பட்ட தாக்​குதல் யாதவ சமூகத்​தினர் அனை​வருக்​கும் அவமானம். யாதவர்​களில் கதாகாலட்​சேபகர்​கள் அதி​க​மாகி​விட்​ட​தால், பிராமணர்​களுக்கு கோபம் வரு​கிறது. யாதவர்​களால் வாழ்​நாள் முழு​வதும் வணங்​கப்​பட்​ட​வர்​கள் இப்​போது அவர்​களைத் தாக்​கு​கிறார்​கள்.

வீடு கட்ட பூசை, திருமண சடங்​கு​கள் என அனைத்​துக்​குமே பிராமணர்​களை அழைக்​கிறோம். யாதவர்​களால் தம் சமூக மக்​களின் திரு​மணங்​கள், மத சடங்​கு​களை தானே நடத்த முடி​யாதது ஏன்? யாதவர்​கள் இப்​போதே ஒன்​றுபட வேண்​டும். இவ்​வாறு லவ்லி சாஸ்​திரி கூறி​யுள்​ளார். 

இந்​நிலை​யில், முகுட்​மணியை சமாஜ்​வாதி கட்சி தலைமை அலு​வல​கத்​துக்கு அழைத்து சால்வை போர்த்தி மரி​யாதை செய்​துள்​ளார் அக்​கட்சி தலை​வர் அகிலேஷ் யாதவ். 

அகிலேஷ் கூறுகை​யில், ‘‘சமூக ஆக்​கிரமிப்​பாளர்​கள் இதர சமூகத்​தின் கலைஞர்​களை​யும் விட்​டு​வைப்​ப​தில்​லை. உ.பி.​யில் 90 சதவி​கித சமூகத்​தினர் கொண்ட தலைநகரம் ஒரு சதவி​கிதத்​தினரிடம் சென்​றது எப்​படி?’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset