நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லெய்செஸ்டர் சிட்டியை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியேறுகிறார்

லண்டன்:

லெய்செஸ்டர் சிட்டியை கால்பந்து கிளப்பை விட்டு ரூட் வான் நிஸ்டெல்ரூய் வெளியே

கடந்த சீசனின் இறுதியில் பிரிமியர் லீக்கிலிருந்து அணி வெளியேற்றப்பட்டது.

இதக் தொடர்ந்து பல வாரங்களாக ஊகங்களுக்குப் பிறகு நிர்வாகி ரூட் வான் நிஸ்டெல்ரூய் கிளப்பிலிருந்து பிரிந்துவிட்டதாக லெய்செஸ்டர் சிட்டி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

லெய்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பும் ரூட் வான் நிஸ்டெல்ரூயும் முதல் அணி பயிற்சியாளராக ரூட்டின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று பரஸ்பரம் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ரூட் ஒரு சவாலான காலகட்டத்தில் கிளப்பை வழிநடத்தியுள்ளார்.

2024 நவம்பரில் அவர் நியமிக்கப்பட்டதிலிருந்து, அவர் தொழில்முறை, நேர்மை, எங்கள் நோக்கங்களுக்கு தெளிவான அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளார்.

இதில் அகாடமியிலிருந்து பல நம்பிக்கைக்குரிய வீரர்களை முதல் அணி சூழலில் ஒருங்கிணைப்பது அடங்கும்.

அவரது அர்ப்பணிப்பு, பணிக்காக கிளப்பில் உள்ள அனைவரின் மரியாதை மற்றும் நன்றியுடன் அவர் வெளியேறுகிறார்.

மேலும் எதிர்காலத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள் என லெய்செஸ்டர் சிட்டி ஓர் அறிக்கையில் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset