நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மேஜா் லீக் கால்பந்து ஊதியம்: முதலிடத்தில் நீடிக்கும் மெஸ்ஸி

வாஷிங்டன்:

அமெரிக்காவின் மேஜா் லீக் கால்பந்து போட்டியில் அதிக ஊதியம் பெறும் வீரராக அர்ஜெண்டினா  நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தொடா்ந்து 3ஆவது ஆண்டாக நீடிக்கிறாா்.

மேஜா் லீக் சோக்கா் வீரா்கள் சங்கம் வெளியிட்ட தகவலின்படி, 

இன்டா்மியாமிக்காக விளையாடும் மெஸ்ஸியின் இந்த ஆண்டு ஊதியம் 20 மில்லியன் டாலராக உள்ளது.

இது, அந்த அணி தனது வீரா்களின் ஊதியத்துக்காக செலவிடும் மொத்தத் தொகையில் ஏறக்குறைய பாதியாகும்.

அதேபோல், போட்டியிலிருக்கும் 21 அணிகள் தங்களின் ஒட்டுமொத்த வீரா்களுக்கும் வழங்கும் ஊதியத்தை விடவும் மெஸ்ஸியின் ஊதியம் அதிகம்.

அடுத்த இரு இடங்களில் டொரன்டோ அணியின் இத்தாலிய வீரா் லொரென்ஸோ இன்சிக்னே, இந்தர் மியாமியின் ஸ்பெயின் வீரா் சொ்ஜியோ பஸ்கெட்ஸ் ஆகியோா் உள்ளனா்.

-பாரத்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset