நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா கிளப் உலகக் கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி

வாஷிங்டன்:

பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் வெற்றி பெற்றனர்.

லூமன் பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோல்களை கிவிச்சா குவரட்ஸ்கெலியா, அக்ராப் ஹக்கிமி ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் போதாபோகா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் போதாபோகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset