நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் மேஜர் கொலை

இஸ்லாமாபாத்: 

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை  2019ஆம் ஆண்டில் பிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அபாஸ் ஷா தெஹ்ரிக்இ தலிபான்களால் கொல்லப்பட்டார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோடில்  இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டிச் சென்றபோது மிக்21 போர் விமானம்  பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்..

இந்நிலையில், கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் தெஹ்ரிக்இ தலிபான்களுடன் நடந்த மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதில் மேஜர் மொய்ச் அபாஸ் ஷா உள்பட 2 பாதுகாப்புப் படை வீரர்களும் இறந்தனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset