நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அதிகார துஷ்பிரயோகத்தால் எப்ஆர்யூ அதிகாரிகள் விபத்தில் தொடர்புடைய லோரி உரிமையாளருக்கு கைதாணை: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகத்தால் தெலுக் இந்தான் எப்ஆர்யூ அதிகாரிகள் விபத்தில் தொடர்புடைய  லோரி உரிமையாளருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.

தெலுக் இந்தானில் நடந்த சாலை விபத்தில் எப்ஆர்யூ அதிகாரிகள் மரணமடைந்தனர்.

இந்த விபத்துக்கு காரணமான லோரி ஓட்டுநருக்கு எதிரான சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதே வேளையில் சம்பந்தப்பட்ட லோரியின் உரிமையாளரான சுப்பிரமணியம் சட்ட ரீதியில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறார்.

இருந்தாலும் அவருக்கு இன்று நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது.

இதற்கு காரணம் ஜேபிஜே அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

சுப்பிரமணியத்திற்கு நீதிமன்றம் வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரி நோட்டிஸ் வழங்கினார். மாலையில் வர வேண்டாம் என அந்த அதிகாரி கூறினார்.

ஆனால் நீதிமன்ற விசாரணை நாளில்  அதிகாரி சுப்பிரமணியத்தை திடீரெம் அழைத்து நீதிமன்றம் வர வேண்டும் என கூறியுள்ளார்.

சுப்பிரமணியத்தால் போக முடியாததால் அவருக்கு கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இதில் சுப்பிரமணியம் செய்த தவறு என்னவென்று  மக்கள் தான் கூற வேண்டும்.

ஆக சம்பந்தப்பட்ட அதிகாரி மீதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset