
செய்திகள் மலேசியா
செராஸ் இரண்டரை மைல் தோகையடி விநாயகர் ஆலயத்திற்கு டான் கோக் வாய் 50,000 ரிங்கிட் மானியம் வழங்கினார்
கோலாலம்பூர்:
மலேசியத் திருநாட்டில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் செராஸ் இரண்டரை மைல் தோகையடி விநாயகர் ஆலயத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா களைக்கட்டி உள்ளது.
பிரபல நாடக இயக்குனர், தோகையடி விநாயகர் ஆலயத்தின் தலைவர் தனபாலன் தலைமையில் இன்று காலையில் நடைபெற்ற சிறப்பு பூசையில் செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கோக் வாய் கலந்து சிறப்பித்தார்.
ஆலய நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் தோகையடி விநாயகர் ஆலயத்திற்கு 50,000 ரிங்கிட் மானியத்தை அவர் வழங்கினார்.
கடந்த 2022, 2023 ஆம் ஆண்டில் தோகையடி விநாயகர் ஆலயத்திற்கு தலா 20,000 வெள்ளி வழங்கினார்.
2024 ஆம் ஆண்டில் 40,000 ரிங்கிட் வழங்கினார். இந்த ஆண்டு 50,000 ரிங்கிட் மானியம் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இந்த தருணத்தில் அவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தனபாலன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 11:30 pm
சம்சுல் ஹரிஸின் உடல் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படும்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:49 pm