நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில்  புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன

ஈப்போ:

புந்தோங் வட்டாரத்தில் பிரதான தலமான சுங்கை பாரி சாலையின் பிரசித்து பெற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் பாலத்தில், தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு " ஜாலோர் கெமிலாங்" பறக்கவிடப்பட்டன என்று புந்தோங் வட்டாரத்தில் நன்கு அறிமுகமான நேசக் கரங்கள் இயக்க தலைவர் இரா.ஜெயசீலன் கூறினார்.

அதுமட்டுமின்றி, புந்தோங் துன் வீ தி சம்பந்தன் சுற்றுப்பாதை சுற்றிலும் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. புந்தோங் தொகுதியில் இவ்விரு தலங்கள் தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பொருட்டு அவர்களது கட்சிக் கொடியை பறக்கவிடுவது தங்களது வழக்கமாக வைத்துக்கொள்வார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல் காலங்களில் கட்சி கொடியை பறக்க விடுவதோடு சரி, பிறகு இந்த இடத்தை கண்டுக்கொள்வது கிடையாது. ஆனால், இங்குள்ள இந்திய இளைஞர் இயக்கத்தினர் தங்கள் நாட்டு பற்றை வெளிப்படுத்தும் பொருட்டு தேசிய கொடியை இந்த இரு முக்கிய தலங்களில் பொருத்தி பறக்க விடுவது பாராட்டபட வேண்டிய விசயம் என்று புந்தோங் மக்கள் குரல் அல்லது ஓசை இயக்க தலைவர் விஜய் வேலாயுதம் குறிப்பிட்டார்.

இவ்வேளையில் இந்த " ஜாலோர் கெமிலாங்" பறக்கவிடும் செயல்நடவடிக்கைக்கு உதவிய மலேசிய சட்டத்துறை துணையமைச்சரும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் மற்றும் ஈப்போ பாராட் கெஅடிலான் தலைவர் தினேஷ் ஆறுமுகம் ஆகியோருக்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset