நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சம்சுல் ஹரிஸின் உடல் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படும்

கோலாலம்பூர்:

சம்சுல் ஹரிஸின் உடல்  வரும் வெள்ளிக்கிழமை கல்லறையில் இருந்து தோண்டி எடுக்கப்படும்.

சம்சுல் ஹரிஸின் குடும்ப வழக்கறிஞர் நரேன் சிங் இதனை உறுதிப்படுத்தினார்.

மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக கேடட், மறைந்த சம்சுல் ஹாரிஸ் ஷம்சுதீனின் உடல்  வெள்ளிக்கிழமை காலை தோண்டி எடுக்கப்படும்.

செமினியில் உள்ள கம்போங் ரிஞ்சிங் உலு இஸ்லாமிய மையத்து கொல்லையில், அந்த இளைஞனின் தாயார் உம்மு ஹம்மான் பீ தௌலத்கன், தடயவியல் நிபுணர் டாக்டர் பூபிந்தர் சிங், சிலாங்கூர் இஸ்லாமிய மதத் துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த செயல்முறை நடைபெறும்.

பின்னர் உடல் உடனடியாக இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனை  தடயவியல் துறைக்கு கொண்டு செல்லப்படும்.

அன்று சுற்றியுள்ள பகுதியை போலிசார் சுற்றி வளைப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

மேலும் சம்சுல் ஹரிஸின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை அமைப்பதில் விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையை, குறிப்பாக அதன் இயக்குனர் எம். குமாரை தாம் பாராட்டுவதாக நரேன் சிங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset